Wednesday, February 11, 2009

பிரிவு

காதல் மொழி பேசும் கண்ணாழனை காண வில்லை

உந்தன் அழகு முகம் காணமல் என் நாளும் ஓட வில்லை

கனவு போல் உள்ளது நீ என்னை தூக்கத்தில் முத்தம் குடுத்தது

இரண்டே நாள் தான் என்றாலும் எனக்கு இது தாங்க முடியாத சோகம் தான்

என் சோகத்தை , சுகமாக்க எப்பொழுது வருவாய் கண்ணா ?

Tuesday, November 25, 2008

அன்பே என் அன்பே

ஏழு மலை, ஆறு கடல் தாண்டி, தொலைந்த
உன்னை கண்டுபிடித்தேன், என் கனவில்.
ஆனால் நிஜத்தில் மிக அருகில் என் கை அணைப்பில்,
சுகமாக உறங்கிக் கொண்டு இருக்கிறாயே, அன்பே !

தொடரும்!!

பூர்வ ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை
உன்னை கண்ட நொடி வரை..
ஈரேழு ஜென்மங்கள் வாழ்ந்தும் உன்னோடு
யுகங்கள் நொடிகள் ஆவது ஏனோ ?

Tuesday, June 24, 2008

மழலை


நான் உனக்கு முதல் குழந்தை !
நீயோ எந்தன் செல்ல குழந்தை !
எந்தன் செல்லத்தை இனிக்கும் வெல்லமாக்க
தருவேன் உனக்கு ஒரு செல்ல மழலை !

முதல் குழந்தை

அதிகாலை நேரம்...
என் முதல் குழந்தையின் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டேன்,
என் காலை பொழுது இனிமையாய் மலர்ந்தது...
என்னவனின் தூக்கம் கலைந்து விடுமோ என்று பயந்து
தென்றலை தாலாட்டு பாட வைத்து விட்டு வந்தேன்...



Thursday, June 19, 2008

இருட்டு

இருட்டு... எங்கும் இருட்டு..

எனக்கு லேசாக முழிப்பு வந்தது.. கண்களை திறக்கவே முடிய வில்லை.
மிகவும் சிரமப்பட்டு கண்களை திறக்க முயற்சித்தேன். கை கால்களை அசைத்து பார்த்தேன். எனக்கு என்ன ஆயிற்று. நீண்ட உறக்கத்தில் இருந்து மீண்ட உணர்வு.

மெதுவாக கண்களை திறந்தேன். திறந்தும் ஒன்றும் பயன் இல்லை. எங்கும் இருட்டே. இங்கு இருந்து ஓடி விட வேண்டும் என்று கை கால்களை வேகமாக உதைத்தேன். அட எதோ ஒரு சத்தம் கேட்கிறதே..

யாரோ பேசுகிறார்கள்.. கத்தி உதவி கேட்கலாம்.. ஆ என்று கத்த முயற்சித்தேன்.. என்ன இது வாயில் இருந்து குரலே வர மாட்டேன் என்கிறது.

மீண்டும் சில குரல்கள் கேட்கிறது.. அட அழகான பாட்டு சத்தம் கேட்கிறதே.. ஆகா என்ன ஒரு இனிமையான குரல். என்னை மீண்டும் தூக்கம் அழகாக தழுவியது..

கனவில் அழகானதொரு தோட்டம். ஒரு திவ்யமான அமைதி. எல்லா மரங்களும் காய் கனிகளோடு செழித்து இருந்தன. அழகான மலர்களும் ஒரு சுகந்தமான மணம் பரப்பின. நான் பார்த்து பழகிய தோட்டம் போல ஒரு மயக்கம். அட அழகான தேவதைகள் ஓடையில் இருந்த பாறையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பட்டம்பூச்சி போல பெரிய இறக்கைகள். இங்கேயே இருந்தால் நன்றாக இருக்குமே.. மீண்டும் அழகான அதே குரல் .. வேறு ஒரு இனிய பாட்டை பாடியது..

எவ்வளவு நேரம் தூங்கினேனோ.. எனக்கு பசிக்கவோ இல்லை. யாரோ எனக்கு உணவு குடுத்து இருப்பார்களோ.. யார் அந்த குரலுக்கு சொந்தகாரர் என்று பார்க்க வெளியில் வரலாம் என்றால் அதே இருட்டு குகை. அதே தூக்கம்.. அதே கனவு.. அதே இசை..

என் வாழ்நாளைக்கும் இதே சிறையோ என்று என்று நினைக்கும் போது யாரோ என்னை அந்த குகையில் இருந்து தள்ளினார்கள். நான் வழுக்கி கொண்டே வெளியே வந்து விழுந்தேன்.. ஆ என்ன ஒரு வெளிச்சம் .. என்னால் மூச்சே விட முடிய வில்லை.. சத்தமாக கத்தி அழுதேன். மூச்சு சீரானது.

ஒரு புதிய ஜனனம்.

பி. கு : ஒரு குழந்தைக்கு தாய் வயிற்றில் என்ன எண்ணங்கள், சிந்தனைகள் வருமோ என்று எண்ணும் போது உதித்த என் கற்பனையை இங்கு பதிவாக்கி உள்ளேன்.

Tuesday, April 29, 2008

சிறுவன்

நிலா இருக்க,
வடை சுடும் பாட்டியும் இருக்க,
சோறு இல்லை ஊட்டுவதற்கு!
தயவு செய்து என் பசிக்காகவேணும்
சோற்றை வீணடிக்காதீர்கள்!